Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி!!!

A
Admin User
Journalist
June 03, 2022 1 min read 28 views
கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி!!!

ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு சாப்பிட்டு வெறுத்து விட்டதா? உங்களுக்கு பல ஊர்களின் ரெசிபிகளை சமைத்து உண்ண பிடிக்குமா? அதிலும் அசைவ உணவுகள் ஊருக்கு ஊர் சுவை வேறுபடும். அந்த உணவுகளை சாப்பிட வேண்டுமென்று ஆசையிருக்கும். அதற்காக அந்த ஊருக்கே சென்று தான் சாப்பிட வேண்டுமென்பதில்லை. உங்கள் வீட்டிலேயே அவற்றை செய்து கொடுத்தால் எப்படி இருக்கும். உங்களுக்கு கேரள மாநிலத்து உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு சுவையான சிக்கன் கிரேவி செய்யலாம். இப்போது இந்த கட்டுரையில், கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று பார்க்க போகிறோம்…

தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு…

  • சிக்கன் - 750 கிராம்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு

  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • பட்டை - 1 பெரிய துண்டு
  • ஏலக்காய் - 6
  • கிராம்பு - 6
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

  • எண்ணெய் - 1/4 கப்
  • வெங்காயம் - 3 (நறுக்கியது)
  • தக்காளி - 4 (நறுக்கியது)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தேங்காய் விழுது - 1/2 கப்
  • கொத்தமல்லி - ஒரு கையளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • சுத்தம் செய்த சிக்கனில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊற விடவும்.
  • பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்துசிறிது உப்பு சேர்த்து மென்மையாக வதக்கும் வரை வதக்கி பின்னர் இறக்கிடவும்.
  • அவை நன்கு ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த பட்டை மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • அதன் பின் அரைத்த வெங்காய தக்காளி மசாலாவைவும், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி மூடி வைத்து மிதமான தீயில் 30-35 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 15 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி பரிமாற தயார்.

Image Courtesy: yummytummyaarthi

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
Recommended for You
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,554
தங்கம் (24k)
1 கிராம்
₹15,876
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க